தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

34


சென்னை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் .

ஜூலை 18ம் தேதி, 1967ம் ஆண்டு தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.

தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள். அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்கு அண்ணாதுரை பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை சபையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement