சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'எய்ம் பார் சேவா' நடத்தும் இசை நிகழ்ச்சி

வளர்ச்சிக் குறைபாடு, ஆட்டிசம் உள்ள வயது முதிர்ந்தோரை பராமரிப்பதற்கான நிதி திரட்ட, சென்னை சேத்துப்பட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு நிதி



சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நிறுவியது 'எய்ம் பார் சேவா' என்னும் சேவை அமைப்பு. இதன் அங்கமாக, 1998 ஆம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூர் மடுவாங்கரையில் கிருபா இல்லம் தொடங்கப்பட்டது. இங்கு வயதுக்குரிய தகுந்த வளர்ச்சி அடையாத மற்றும் வளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளானோர் பராமரிக்கப் பட்டு வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த இல்லத்தில் 18 முதல் 65 வயது வரையிலான, 30க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான தினசரி உணவு மருத்துவம் மற்றும் அன்றாட பராமரிப்பு செலவுகளுக்கான நிதி திரட்ட பல்வேறு முன்னெடுப்புகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 'ராமம் பஜே - ராமபிரானுக்கு இசையால் ஆராதனை!' என்னும் இசை நிகழ்ச்சியை சென்னை சேத்துப்பட்டு சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் நடத்துகிறது. ஜூலை 19, சனிக்கிழமையன்று நடக்கும் நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் சூரியகாயத்ரி கலந்து கொண்டு பாடுகிறார். ஆதர்ஷ் அஜய்குமார், விஷ்வாஸ் ஹரி, கிருபல் சாய்ராம், பிரசாந்த் சங்கர், ரோஹித் ஆகிய இசைக்கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் அனைத்து நிதிகளும் இவர்களின் பராமரிப்பு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும். நிகழ்வுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 95000 60153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement