பைனலில் ருடுஜா ஜோடி

ஓலோமவுக்: செக் குடியரசில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ருடுஜா போசாலே, சீனாவின் உஷுவாங் ஜெங் ஜோடி, செக் குடியரசின் மெக்டலினா, சுலோவாகியாவின் சுவட்டிகோவா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 2-6 என எளிதாக இழந்தது. பின் சுதாரித்த இந்த ஜோடி, அடுத்த செட்டை 6-2 என வசப்படுத்தியது. வெற்றியாளரை நிர்ணயிக்க நடந்த 'சூப்பர் டைபிரேக்கரில்' ருடுஜா ஜோடி 10-8 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 16 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 2-6, 6-2, 10-8 என போராடி வென்று, பைனலுக்கு முன்னேறியது.
இதில் 'நம்பர்-2' அந்தஸ்து கொண்ட சுலோவேனியாவின் டேலிலா, ரேடிசிக் ஜோடியை சந்திக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உயிருக்கு ஆபத்து: டி.எஸ்.பி. சுந்தரேசன் கண்ணீர்
-
ரூ.1 கோடி 'டிஜிட்டல்' கைது மோசடி; முதல்முறையாக மேற்கு வங்கத்தில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
-
இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
-
இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு
-
இந்தியாவில் முதல்முறை...! கோவையில் கல்லீரல் மாற்று சிகிச்சையில் பரஸ்பரம் உதவிக்கரம்
-
செல்லியம்மன் தேர் திருவிழா
Advertisement
Advertisement