இந்திய விமானங்கள் ஆக.24 வரை வான்வெளியில் பறக்கக்கூடாது; பாக்., தடை நீட்டிப்பு

லாகூர்: இந்திய விமானங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை பாகிஸ்தான் ஆக. 24 வரை நீட்டித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளும், அவர்களின் நிலைகளையும் இந்திய ராணுவம் அழித்தது.
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று இந்தியா அறிவித்தது. இந்தியாவின் செயல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு நிலையை கடைபிடித்து வருகிறது. இந் நிலையில் தமது நாட்டின் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை ஆக.24ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு, பயணிகள் மட்டுமல்லாது, சரக்கு விமானங்கள், ராணுவ விமானங்கள் மற்றும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கப்படும் விமானங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்து உள்ளது.
ஜூலை 18ம் தேதி மாலை 3.50 மணி முதல் ஆக.24ம் தேதி மாலை 5.19 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று பாக். விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும்
-
இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை
-
கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்
-
டி.எஸ்.பி., சுந்தரேசன் வழக்கில் புதிய திருப்பம்; தலைமை காவலர் சஸ்பெண்ட்
-
ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு
-
உ.பி.யில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 24 மணிநேரத்தில் 18 பேர் பலி