தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அட்டகாசம்



ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனுார் வனப்பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அதில், தனியாக பிரிந்த ஒற்றை யானை மரக்கட்டா, ஆலஹள்ளி, கிரியனப்பள்ளி தடிகல், ஏணிமுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிகிறது.


கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரியும் யானை தாக்கி, இருவர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஒற்றை யானை நேற்று முன்தினம் முதல் மரக்கட்டா கிராமம் அருகே சுற்றி வருகிறது. அதை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement