கிறிஸ்து கல்லுாரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

புதுச்சேரி : மூலக்குளம் கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ஸ்லாம் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடந்தது.

விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன் குமார், சிவசங்கர், சாம்பால் கல்வி அறக்கட்டளை மற்றும் பால்சன்ஸ் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சாம்பால் ஆகியோர் கலந்து கொண்டு, ஸ்லாம் உடற்பயிற்சி கூடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.

இதில், கிறிஸ்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் சிவக்குமார், சாம்பால் கல்வி அறக்கட்டளை குழுமத்தின் இயக்குநர் குமரவேல், நிர்வாக அதிகாரி சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

Advertisement