சோளக்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலையில், முக்கிய கிராமமாக சோளக்காடு பகுதி அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு சுற்றுலா வருபவர்கள், சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் வீட்டிற்கு தேவையான பலாப்பழம், அன்னாசி, மலை வாழைப்பழம், சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தற்போது, அப்பகுதி சாலையை ஆக்கிரமித்து சிலர் கடை நடத்தி வருவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் வாழவந்திநாடு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement