வீட்டிற்குள் புகுந்த 'கழுதை விரியன்'

வெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், மூலக்காடு பஞ்., மசக்காளிப்பட்டியை சேர்ந்தவர் கவுதம்; இவரது வீட்டிற்குள், நேற்று பாம்பு ஒன்று புகுந்தது.இதை கவனித்த அவர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.


சம்பவ இடத்துக்கு விரைந்த, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், கவுதம் வீட்டிற்குள் புகுந்த பாம்பை தேடினர். அப்போது, வீட்டிற்குள் ஒரு மூளையில் பதுங்கியிருந்த, இரண்டு அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட கழுதை விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், அத்தனுார் அருகே உள்ள சித்தர்மலை காட்டுப்பகுதியில், பத்திரமாக விடப்பட்டது.

Advertisement