ராசிபுரம் புது பஸ் ஸ்டாண்ட் பணி விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுரை
ராசிபுரம்;ராசிபுரம் நகராட்சி, அனைப்பாளையம் பகுதியில், ஆறு தளங்களுடன், 53.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்-ரே, ஆய்வகம், ஸ்கேன் அறை, புற நோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, முடவியல், கண், பல், காது, குழந்தை மருத்துவம், அவசர கால மகப்பேறு குழந்தை பராமரிப்பு, பிரசவ அறை, இருதய கண்காணிப்பு, ஆண், பெண் பொது மருத்துவம், பிரேத பிரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 250 படுக்கைகள் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராசிபுரம் நகராட்சி, அணைப்பாளையத்தில், 10.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை, ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 13.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டு வருவதையும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
-
ஜால்ரா போடும் கம்யூனிஸ்ட்டுகள்: பழனிசாமி