ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின், மெத்ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அசாம் ரைபிள்ஸ் படையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 642 கிராம் ஹெராயின் மற்றும் 10.44 கிலோ மெத்ஆம் பெட்டமைன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 36.79 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த போதை மாத்திரைகளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக அசாம் ரைபிள்ஸ் படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement