அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்தது

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 26,010 கோடி ரூபாய் குறைந்து, 59.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அன்னிய செலாவணியின் முக்கிய அங்கமான, அன்னிய கரன்சி சொத்து மதிப்பு குறைந்ததே மொத்த கையிருப்பு குறைய முக்கிய காரணமாக அமைந்தது.

அன்னிய கரன்சி சொத்துக்கள் கடந்த 4ம் தேதியுடன் ஒப்பிடுகையில், 21,000 கோடி ரூபாய் குறைந்து 50.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தன. இதே காலத்தில் தங்க கையிருப்பு 4,157 கோடி ரூபாய் சரிந்து 7.17 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்தாண்டு செப்டம்பரில் இதுவரை இல்லாத வகையில், 59.92 லட்சம் கோடி ரூபாய் என்ற உச்சத்தை கண்டது.

Advertisement