போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை

தட்சிணகன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா நகரின் கே.வி.ஜி., சந்திப்பு அருகில், நடப்பாண்டு ஏப்ரல் 20ம் தேதியன்று, இரவு 9:30 மணியளவில் சுள்ளியா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கித் என்பவர், குடிபோதையில் பைக் ஓட்டி வந்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சுள்ளியா ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிபதி மோகன் பாபு தீர்ப்பளித்தார்.
அது மட்டுமன்றி ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, சுள்ளியா போலீஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
sekar ng - ,
21 ஜூலை,2025 - 10:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
Advertisement
Advertisement