அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
கரூர்: ''தமிழக அறநிலையத்துறை செலவினங்கள் குறித்து, அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிர
மணியம் தெரிவித்தார்.
கரூர், வி.என்.சி., மஹாலில் ஹிந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அறநிலையத்துறைக்கு, பக்தர்கள் மூலம் நிறைய வருமானம் செல்கிறது. குறிப்பாக, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு, தொழில் அதிபர் ஷிவ் நாடார், 400 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி செய்துள்ளார்.
அதேபோல் பலர், ஹிந்து கோவில்களுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். இதனால், அற நிலையத்துறை செலவினங்கள் குறித்து, அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நாட்டில், மொகலாயர் ஆட்சிக்
காலத்தில் நடந்த பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அதையெல்லாம் பாட நுால்களில் கொண்டு வர, மத்திய பா.ஜ., அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஹிந்து முன்னணி பாராட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் காரணமாக, பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க உளவு துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை திருப்புவனத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த, அஜித்குமார் விவகாரத்தை வைத்து கொண்டு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, புதிதாக சிலை வைக்க கூடாது என கூறி
வருகிறார். இதை, ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
நாட்டில் வங்கதேசம் உள்ளிட்ட, பல வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். இதனால், 2026க்குள் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை, திருத்தி அமைக்க வேண்டும். மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில், முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதில், பங்கேற்க அனைத்து கட்சி
களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
இதனால், மாநாட்டில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் தர, ஹிந்து முன்னணி சார்பில், நேரம் கேட்டிருந்தோம். ஆனால், நேரம் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கோட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட, ஹிந்து முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும்
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்