'மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ரூ.3.40 லட்சம் கோடியை தாண்டியது'

ஹைதராபாத்:இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 40 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, கிட்டத்தட்ட 3.40 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஐ.ஐ.டி., ஹைதராபாதின் 14 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தெரிவித்ததாவது:
நம் நாட்டின் மின்னணு பொருட்கள் உற்பத்தி, கடந்த 11 ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களே பொறாமைப்படக் கூடிய அளவுக்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. அதே போல, ஏற்றுமதி எட்டு மடங்கு அதிகரித்து 3.40 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. வெகு சில நாடுகளே இவ்வளவு மின்னணு பொருள் ஏற்றுமதியை எட்டியுள்ளன.
நடப்பாண்டுக்குள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் செமிகண்டக்டர் சிப், வணிக ரீதியான பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செமிகண்டக்டர் தயாரிப்புக்கு தேவையான மூலதன பாகங்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே, செமிகண்டக்டர் தயாரிப்பில், உலகின் முன்னணி ஐந்து நாடுகளில் விரைவில் இந்தியாவும் இடம்பெறும். மேலும், வரும் 2027ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாக, நாட்டின் முதல் புல்லட் ரயிலும் ஓடத் துவங்கிவிடும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்
-
தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை