பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

பழநி: பழநி - கொடைக்கானல் சாலை தேக்கந்தோட்டம் சோதனை சாவடி அருகே பழநி வனச்சரகர் கோகுல கண்ணன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சுற்றுலாப் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கொடைக்கானல் சாலை பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது.

பழநி, வரதமாநதி அணை, ஆயக்குடி வனச்சரக பகுதியில் ஒட்டன்சத்திர வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பை அகற்றும் பணியும் நடைபெற்றது.

Advertisement