'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை

13


மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு, ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடைவிதித்தது.

மக்களை இல்லம் தேடி சென்று, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், தி.மு.க.,வினர் கட்சி உறுப்பினர்களாக சேர்த்து ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:



* உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க.,நடத்தலாம். ஆனால் ஓ.டி.பி., விவரங்களை கேட்கக் கூடாது.

* டிஜிட்டல் முறையில் தனி நபர் தகவல் பாதுகாக்கப்படுவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.

* ஓ.டி.பி., விவரங்களை கேட்க வேண்டாம் என்று போலீசார் கூறும் நிலையில் எதற்காக கேட்கிறார்கள்.

* ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் இதனை விற்பனை செய்தால் என்ன செய்வது?



* சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்த திட்டங்கள் இல்லை.வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம்.



* மொபைல் போனில் ஓ.டி.பி., எண் பெறுவதற்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement