'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
திருப்பூர்: 'தமிழகத்தில் போலீஸ் துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் நிகழ்கிறது,' என, ஹிந்து முன்னணி கவலை தெரிவித்துள்ளது.இதுகுறித்த, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், அரசு துறைகளில் நேர்மையான அதிகாரிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது. அவர்களை பணி செய்ய விடாமல் உயர் அதிகாரிகள் தடுத்து மன உளைச்சலை ஏற்படுத்துவதும் நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ள போலீஸ் அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் போல் செயல்படுகின்றனர்.
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சுந்தரேசன் கூறிய தகவல்கள் அதிர்ச்சியையும், உயர் அதிகாரிகள் முகத்திரையை கிழிப்பதாகவும் உள்ளது. அவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட வைக்க இரு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.நேர்மையான அதிகாரிகள் கட்டுப்படாவிட்டால் பணியிட மாற்றம் செய்கின்றனர். வேலியே பயிரை மேய்வதாக இது போன்ற சம்பவங்கள் உள்ளன.போதை பொருள் கடத்தி சிறையில் உள்ள வெளிநாட்டினர் சிறை ஊழியர்களிடம் தகராறு செய்த போது, அவர்களிடம் பிரச்னை வேண்டாம் என்று குற்றவாளிகளுக்கு ஆதரவாக உயர் அதிகாரி யெல்படுகிறார். போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என செய்திகள் வருகிறது.அதேபோல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நபர்களும், சிறைத்துறையினரையும், போலீசாரையும் மிரட்டி தாக்குகின்றனர். இதையும் கண்டு கொள்ள வேண்டாம் என்ற உத்தரவு வருகிறது.
போலீஸ் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஜனநாயக போராட்டம் நடத்தினால், பொய் வழக்குகள் பாய்கிறது; பக்தி விழாக்களுக்கு கூட எப்படி தடை போடலாம் என இவர்கள் யோசிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்காண்டுகளில், தமிழகத்தில் கொலை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. லாக்கப் மரணங்களுக்கு விடை தெரியாமல் போகிறது.சட்ட விரோத மது விற்பனை, போதை பொருள் கலாசாரம், கனிம வள கடத்தல் என நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புகார் அளித்தால் அவருக்கு மிரட்டல் வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர் கெட இரு உயர் அதிகாரிகள் தான் காரணம் என்ற சந்தேகம் வலுக்கிறது. நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவது காட்டுமிராண்டித்தனமானது. பாரபட்சமின்றி, நேர்மையாக, சுதந்திரமாக, சட்டப்படி போலீசார் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 3 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
-
கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்
-
''கூட இருந்து குழி பறித்தவர் அன்வர் ராஜா'': பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்
-
விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்