முப்பழ பூஜை அபிஷேகம்

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சிங்கத்திருளப்ப சுவாமி கோயில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு விலகலேடி தாயாதியார் சார்பில் முப்பழ பூஜை நடந்தது.
அதிகாலை பூஜைகளை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் வீரபத்திரர், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மூலவரான சிங்க திருளப்ப சுவாமிக்கு அபிஷேகம், பாராயணத்திற்கு பின் முப்பழ அபிஷேகம் பூஜை நடந்தது. சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மகா தீபாராதனை அடுத்து முப்பழ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது. ராஜபாளையம், முதுகுடி, சத்திரப்பட்டி, வெங்காநல்லுார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா நீக்கம்
-
தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி., யார்? சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழக அரசு!
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
Advertisement
Advertisement