காணாமல்போன முதியவர் இறந்தநிலையில் மீட்பு

வேடசந்தூர்: குட்டம் ஊராட்சி சுக்காம்பட்டியில் ஒன்னரை மாதங்களுக்கு முன்பு காணாமல் போன முதியவர் உடல், ரங்கமலை கிண்ணாரக் கரட்டில் எழும்புக் கூடாய் மீட்கப்பட்டது.

வேடசந்தூர், குட்டம் ஊராட்சி, சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி 85.

இவர் கடந்த மே மாதத்தில் காணாமல் போய்விட்டதாக அவரது மகன் கோபால் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், கல்வார்பட்டி ஊராட்சி காந்திநகர் ரங்கமலை கிண்ணார கரடு மலைப்பகுதியில், 500 மீட்டர் உயரத்தில், முதியவர் ஒருவர் இறந்து எலும்புக்கூடாய் கிடப்பதாகவும்,அருகில் காவி வேட்டி, காவி துண்டு, வளைவான கைத்தடி மற்றும் தென்னை மரத்துக்கு வைக்கும் பூச்சி மருந்து டப்பா ஒன்று கிடப்பதாகவும் கூம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கோபாலை சம்பவ இடத்தை பார்வையிட வைத்த போலீசார் இறந்தவர் தந்தை முத்துச்சாமிதான் என ஒப்புக்கொண்டபின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement