நிலக்கோட்டை எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

நிலக்கோட்டை: - நிலக்கோட்டை எரிவாயு மயானம் புதிதாக கட்டப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
நிலக்கோட்டை பேரூராட்சியில் 2022--23 கலைஞர் நகர்ப்புற மேம்படுத்த திட்டத்தின் கீழ் ரூ. 1.55 கோடியில் நவீன எரிவாயு மயானம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த குட்கேர் என்விரோ சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இதன் ஒப்பந்த பணியை எடுத்து 6 மாதங்களுக்கு முன்பாக பணிகளை முடித்தது. இதற்கிடையே 4 மாதங்களுக்கு முன்பு இந்த மயானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஜெனரேட்டர் திருடு போனது.
காணாமல் போன ஜெனரேட்டரை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டனர். ஒப்பந்தபணி மேற்கொண்ட நிறுவனமும் மயான பொறுப்பை பேரூராட்சி வசம் ஒப்படைத்து விட்டது.
இருப்பினும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. பொதுமக்களில் நலம் கருதி மாவட்ட நிர்வாகம் எரிவாயு மின்மயானத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி