வரத்து அதிகரிப்பால் விலை குறைந்த முருங்கை

ஒட்டன்சத்திரம்: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை பத்தே நாட்களில் கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரு.13க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி கள்ளிமந்தையம் சாலைப்புதூர் அம்பிளிக்கை இடையகோட்டை மார்க்கம்பட்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் பகுதிகளில் விளைந்த முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை வரத்து குறைவாக இருந்ததால் ஒரு கிலோ முருங்கைக்காய் கிலோ ரூ.33 க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ. 13 க்கு விற்பனையானது.
இனி வரும் நாட்களில் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி