பொக்லைன் ஆப்ரேட்டர் மீது தாக்குதல்: விவசாயி மீது வழக்கு




குளித்தலை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கூட்டப்பள்ளியை சேர்ந்தவர் பூபதி, 47; பொக்லைன் ஆப்ரேட்டர். இவர், கடந்த, 17 காலை, 7:15 மணிக்கு, மத்தகிரி செங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மேல்புறம், ஆற்றுவாரி பகுதியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துார்வாரிக்கொண்டிருந்தார்.

அப்போது, மத்தகிரி பஞ்., தெற்கு கல்லுப்பட்டியை சேர்ந்த ராஜலிங்கம், 51, என்ற விவசாயி, நிலத்தில் போடப்பட்டிருந்த பைப் லைன் உடைத்துவிட்டதாக கூறி, ராஜலிங்கம், உறவினர்கள் வெள்ளக்கண்ணு, அன்பரசன், மூர்த்தி, பிரபாகரன், ஆகியோர், பொக்லைன் ஆப்ரேட்டர் பூபதியை தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த பூபதி, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து பூபதி கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார், ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே வழக்கில், ராஜலிங்கம் கொடுத்த புகார்படி, பூபதி மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement