தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திண்டிவனம் : மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனம் அடுத்த புலியனுாரில் நடந்தது.

கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞணி அமைப்பாளர் சம்சுதீன், ஊராட்சி தலைவர் அண்ணாமாலை வரவேற்றனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், பேச்சாளர்கள் கரூர் முரளி, இன்பக்குமரன் பேசினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், சிறுபான்மை பிரிவு அன்சாரி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி சிவானந்தம் நன்றி கூறினார்.

Advertisement