பல்கலை., மையத்தில் விரிவுரை பயிற்சி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா கல்வி மையத்தில் 'யோக தத்துவமும் பயிற்சியும்' என்ற தலைப்பில் ஒரு நாள் விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.

இந்திய தத்துவ ஆராய்ச்சி அமைப்பு உதவியுடன் நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் முதன்மையர் கோபிநாத் துவக்க உரையாற்றினார். யோகா கல்வி இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். கலைப்புல முதல்வர் அருள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

முன்னாள் இயக்குநர் சுரேஷ், பேராசிரியர் திருமால் , பயிற்சியாளர் சாந்தி உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பேராசிரியை சுசீலா நன்றி கூறினார்.

Advertisement