ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

7

புதுடில்லி: ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்ட விரோத பந்தயங்களை ஊக்குவித்ததாக நடிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சட்ட விரோதமாக பந்தயம் நடத்தும் இணையதளங்களை பிரபலங்கள் ஆதரிப்பதால், பயனர்கள் ஈர்க்கப்பட்டு, அதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பணத்தை இழப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இத்தகைய விளம்பரங்களில் நடித்த அமலாக்கத்துறை நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர கொண்டா, ராணா டகுபதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.


தற்போது அவர்களை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நடிகர் ராணா டகுபதி, ஜூலை-23ம் தேதி, பிரகாஷ் ராஜ் ஜூலை 30ம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆக.,6 ம் தேதியும் லட்சுமி மஞ்சு ஆகஸ்ட் 13ம் தேதியும் அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement