கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் 101, இன்று உடல்நல குறைவால் காலமானார்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்; ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதாநந்தன் இன்று மாலை காலமானார்.
அச்சுதானந்தன் வரலாறு:
அச்சதானந்தன் கேரள மாநிலத்தின் 20வது மற்றும் முன்னாள் முதல்வர் ஆவார். 2006 முதல் 2011 வரை மாநிலத்தின் முதல்வராக பணியாற்றினார்.
2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். கேரள அரசியலில் நீண்ட காலம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்த பெருமைக்குரியவர். 15 ஆண்டுகள் இவர் அந்த பதவியில் இருந்தார்.
தொழிற்சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த அச்சுதானந்தன், 1938ம் ஆண்டு மாநில காங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இ.கம்யூ., உறுப்பினர் ஆனார். 1964ம் ஆண்டு, இ.கம்யூ., கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கட்சியை நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
1985 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினராக இருந்து வந்தார்.










மேலும்
-
ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைகோள்: இஸ்ரோ அறிவிப்பு
-
கோல்கட்டா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 160 பேர் அவதி
-
விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு