'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
தாசில்தார் அரவிந்தன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சங்கர், லட்சுமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், 15 துறைகளை சேர்ந்த 46 சேவைகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவியில் 'உங்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தார்.
புவனகிரி
ஒன்றிய தி.மு.க., செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பழனி மனோகரன்,
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராசு, ரவிக்குமார், முத்துகுமாரசாமி
பங்கேற்றனர்.
முகாமில் பொதுமக்கள் பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
மேலும்
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி