ஒரத்துாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

சேத்தியாத்தோப்பு,: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.

மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருளழகன், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, பாஸ்கரன், அவைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

ஒன்றிய பேரவை செயலாளர் கார்த்திக், அரங்கப்பன், பட்டுசாமி, சதீஷ், தில்லைமணி, ராஜ்குமார், ராமச்சந்திரன், கமலக்கண்ணன், சுனிதா, நந்தினி, சுபாஷினி, ரங்கன், புருேஷாத்தமன், ராமகிருஷ்ணன், சக்திவேல் பங்கேற்றனர்.

Advertisement