பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் கையெழுத்திட்டு கடிதம்!

புதுடில்லி: பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் ராஜ்யசபாவில் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த சூழலில், பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில்,நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக, லோக்சபாவில் மொத்தம் 145 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 63 எம்.பி.க்களும் கையெழுத்திட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்த 145 லோக்சபா எம்.பி.,க்களில் அனுராக் தாக்கூர், ரவி சங்கர் பிரசாத், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் , ராஜீவ் பிரதாப் ரூடி, பிபி சவுத்ரி, சுப்ரியா சுலே மற்றும் வேணுகோபால் ஆகியோர் அடங்குவர்.
அரசியலமைப்பின் பிரிவுகள் 124, 217 மற்றும் 218ன் கீழ் நீதிபதி வர்மாவுக்கு எதிராக நோட்டீஸ் சமர்ப்பிக்கப் பட்டது.
ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தில் லோக்சபாவில் குறைந்தது 100 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் குறைந்தது 50 எம்.பி.க்களும் கையெழுத்திட வேண்டும். இந்த தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பில் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். பதவி நீக்கம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்து உள்ளனர் என பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.









மேலும்
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா
-
ஜூலை 30ல் விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைகோள்: இஸ்ரோ அறிவிப்பு
-
கோல்கட்டா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 160 பேர் அவதி
-
விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..