மாநகராட்சி பிரிப்பு விவகாரம் சிவகுமார் வேண்டுகோள்
மைசூரு: ''பெங்களூரு மாநகராட்சி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்,'' என துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தில், கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுகிறது. மகதாயி திட்டத்திற்கு கோவா அரசு எதிராக உள்ளது. மத்திய அரசு, கோவா பா.ஜ., அரசிடம் பேச வேண்டும்.
கிரேட்டர் பெங்களூரு ஆணைய மசோதாவை தாக்கல் செய்த போது, பெங்களூரில் ஒன்று முதல் 7 மாநகராட்சி உருவாக்கப்படும் என்று, சட்டசபையில் நான் தெரிவித்தேன். இதுபற்றி விவாதமும் நடந்தது. இப்போது 5 புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளையும் கேட்டு உள்ளோம். இப்போது எதிர்க்கட்சி தலைவர் அசோக், ஐந்து மாநகராட்சி உருவாக்கப்பட்டதை எதிர்க்கிறார். தயவு செய்து மாநகராட்சி விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.
தர்மஸ்தலா வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி என்னிடம் சரியான தகவல் இல்லை. உள்துறை அமைச்சரிடம் பேசுவேன். மைசூரு மாநாட்டில் சிவகுமாரை அவமதிக்கவில்லை என்று, முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார். ஆனாலும் பா.ஜ., தலைவர்கள் விமர்சிக்கின்றனர். என் மீது அவர்களுக்கு அன்பு அதிகம். என்னை பற்றி பேசாமல் அவர்களால் இருக்கவே முடியாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், என்னை சந்திக்க வாரத்தில், இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
-
கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்