ஹிந்து நாடார் அசோசியேஷன் காமராஜர் பிறந்த நாள் விழா

பெங்களூரு: கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் பெங்களூரு கலாசிபாளையாவில் உள்ள சங்க அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவை, பெண்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கினர். காமராஜர் படத்துக்கு சங்க நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் மலர் துாவி வணங்கினர்.

பெங்களூரு தமிழ் சங்கத்தின் காமராஜர் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, 'ஸ்கூல் பேக்' வழங்கப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஹிந்து நாடார் அசோசியேஷன் தலைவர் தியாகராஜன், செயலர் கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜவஹர், முன்னாள் துணைத்தலைவர் சுரேஷ் குமார், பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தாமோதரன், கர்நாடக ஐகோர்ட் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் கெம்பண்ணா, கர்நாடக தேவர் சங்க தலைவர் கனகராஜ்.

தேவர் சங்க செயலர் தன்ராஜ், கே.டி.எஸ்., வங்கி தலைவர் ஞானகுரு தேவர், முதலியார் சங்க நிர்வாகி இந்திரா, பெங்களூரு காமராஜர் பள்ளி தாளாளர் ராமசுப்ரமணியன், தேவர் சங்க முன்னாள் தலைவர்கள் மணிகண்டன், பாபு தேவர், கந்தன் தேவர், துணை செயலர் சீனிவாசன், காமராஜ் என்கிளேவ் அசோசியேஷன் சசிகாந்த், வணிக வலைதளம் பிரிவு செயலர் ஆதிஷ் மன்னா உட்பட பலர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை குருசாமி, பாலமுருகன், விஜயகுமார், விஜயா ராம்குமார் செய்திருந்தனர்.

Advertisement