கர்நாடகாவில் 6 மாதங்களில் வெறிநாய் கடித்து 19 பேர் பலி
பெங்களூரு : கர்நாடகாவில் கடந்த ஆறு மாதங்களில் 2.21 லட்சம் பேரை, வெறி நாய்கள் கடித்ததில், 19 பேர் ரேபிஸ் தொற்று தாக்கி உயிரிழந்ததாக, மாநில சுகாதார துறை அறிவித்து உள்ளது.
கடந்த வாரம் ஹூப்பள்ளியில் மூன்று வயது சிறுமியை, இரண்டு தெரு நாய்கள், கடித்து குதறின. படுகாயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது தொடர்பாக, சுகாதார துறை முதன்மை செயலர் ஹர்ஷா குப்தா நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 3.6 லட்சம் பேரை வெறி நாய்கள் கடித்துள்ளன. இதில் மொத்தம் 42 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 1.69 லட்சம் பேரை வெறி நாய் கடித்ததில், 18 பேர் உயிரிழந்தனர்.
நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் 30 வரை 2.21 லட்சம் பேரை வெறி நாய்கள் கடித்துள்ளன. இதில், 19 பேர் ரேபிஸ் நோயால் இறந்து உள்ளனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்து உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நாய்கடிக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மருந்துகள் இருப்பு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெறிநாயால் சிறிய கீறலோ அல்லது கடிக்கப்பட்டாலோ அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
அதிகபட்சமாக விஜயபுராவில் 15,527 பேரும்; பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13,831 பேரும்; ஹாசனில் 13,388; தட்சிண கன்னடாவில் 12,524; பாகல்கோட்டில் 12,392 பேரும்; பெங்களூரு ரூரலில் 4,408; குடகில் 2,523; சாம்ராஜ் நகரில் 1,810 பேரும்; யாத்கிரில் 1,132 பேரும் வெறி நாய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
தெரு நாய்களுக்கு அவ்வப்போது ரேபிஸ் நோய் தாக்காமல் இருக்க, அவ்வப்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி
-
பணமூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க எம்.பி.க்கள் 200 பேர் பார்லியில் தீர்மானம் தாக்கல்
-
கதண்டு வண்டு கடித்ததில் தம்பதி பலி; தென்காசியில் சோகம்