தல் ஞாயிறையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்
நாமக்கல்: நாமக்கல், மலைக்கோட்டை எதிரே, வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒரே கல்லில், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி வருகை தரும் திரளான பக்தர்கள், ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று, ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை, 9:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து, நல்லெண்ணெய், சீயக்காய்த்துாள், திருமஞ்சள், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், 1,008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும்
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி