நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது; தம்பட்டம் அடிக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: "நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு, எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக, "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்" பத்திரிகை ஒரு வழக்கமான பொய்யான கதையை வெளியிட்டது.
அதை யாரும் எனக்கு விளக்க வேண்டியதில்லை. சந்தைக்கு எது நல்லது, அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது வேறு யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். நான் இல்லையென்றால், சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது.
அது செயலிழந்திருக்கும். எனவே, உங்கள் தகவலை சரியாக வெளியிடுங்கள். மக்கள் எனக்கு விளக்கவில்லை, நான் அவர்களுக்கு விளக்குகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
வழக்கமாக கடந்த சில தினங்களாக தன்னை பெருமையாக டிரம்ப் பேசி வருகிறார்.
அதற்கு ஒரு உதாரணம், நான் தான் பல்வேறு நாடுகளில் நிகழும் போர் மற்றும் சண்டைக்கு முடிவுரை எழுதி வருகிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.











மேலும்
-
ஆன்லைன் ரம்மி விளம்பரம்: நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பொறுப்பு ஏற்பு
-
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்: வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி