இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது: பிரதமர் மோடி பேட்டி

11

புதுடில்லி: '' ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது'' என பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், பார்லி மென்ட் வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: ஆரோக்கியமான விவாதங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையால் இந்தியாவின் ராணுவ பலத்தை உலகம் அறிந்தது. ராணுவ வலிமையை உலகமே கண்டு வியந்தது.

100 சதவீத வெற்றி



ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் 100 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. பாதுகாப்பு படையினருக்கு அளித்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டன. பயங்கரவாதிகள் முகாம்கள் 22 நிமிடத்தில் அழிக்கப்பட்டன. பார்லி., கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருக்கும். மழைக்கால கூட்டத் தொடரில் சுமுகமான விவாதங்கள் நடத்த வேண்டும்.

பெருமையான தருணம்



மழைக்காலம் என்பது புதிய தொடக்கங்களுக்கான காலம். கடந்த 10 ஆண்டு சராசரி விட இந்த ஆண்டு மிக அதிகமான மழைப்பொழிவு உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி பறக்கிறது. இந்தியாவின் வெற்றி மற்றும் கவுரவத்தை கொண்டாட இதுவே சரியான தருணம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Advertisement