''கூட இருந்து குழி பறித்தவர் அன்வர் ராஜா'': பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்

சென்னை: தமிழக பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்களின் நலனை விட, வகுப்புவாத, பிரிவினைவாத ஆதரவும், சுயநல மதவாத அரசியலுமே முக்கியம் என வெளிப்படையாக அறிவித்த அன்வர் ராஜாவுக்கு நன்றி.
தமிழக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.,யுமான அன்வர் ராஜா திமுக.,வில் இணைந்தார் என்ற செய்தி, இன்பத் தேன் வந்து பாய்வது போல இருந்தது. அதிமுக தான் அவருக்கு அரசியலில் அடையாளம் தந்தது. எம்எல்ஏ, அமைச்சர், எம்.பி., என்று எத்தனை உயர் பதவிகளை ஒரு கட்சி தந்தாலும், எல்லாவற்றையும் விட, தமிழ் மக்களின் நலனை விட தன் மதமே முக்கியம் என்பதை, திமுக.,வில் இணைந்ததன் மூலம் அன்வர் ராஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
தன் மதத்திற்காக, உயர் பதவிகளை தந்த, வாழ்க்கையில் அத்தனை வளங்களையும் தந்த கட்சியை துறந்திருக்கிறார் அன்வர் ராஜா. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. பெற்ற அன்னையைப் போல, பிறந்த தாய் மதமும் முக்கியம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உணர்வின்றி இருக்கும் இந்துக்களுக்கு, தன் கட்சித்தாவல் மூலம், செவிட்டில் அறைந்தது பாடம் சொல்லியிருக்கிறார் அன்வர் ராஜா.
இன்றைய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அன்வர் ராஜா இருந்தார். ஆனால், அங்கு போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற மறைமுகமாக உள்ளடி வேலை செய்தார். அங்கு தேர்தல் பணிக்காக சென்றிருந்தபோது இதை நான் நேரிலேயே அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்று கூட இருந்து குழி பறித்தவர், இன்று தான் எதிரி என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
அன்வர் ராஜா சரியான இடத்தை வந்தடைந்து இருக்கிறார். ஒட்டுமொத்த இந்து சமுதாயத்திற்கும், தமிழக மக்களுக்கும் சொல்லாமல் சொல்லி இருக்கும் இந்த செய்தியால், திமுகவில் இருக்கும் இந்துக்களும், நடுநிலை என்ற பெயரில் தன்னை உணராமல் இருக்கும் இந்துக்களும் இனியாவது கொஞ்சம் உணர்வு பெறுவார்கள் என்று நினைக்கிறேன். நம்புகிறேன். அன்வர் ராஜாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






மேலும்
-
கோல்கட்டா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 160 பேர் அவதி
-
விமான விபத்து சம்பவத்தில் வங்கதேசத்துக்கு உதவ தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு
-
திருப்பதி கோவிலில் நாட்டு மாடுகளின் பால் மட்டுமே பயன்படுத்தணும்; கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
-
விரைவில் விக்டோரியா ஹால்..
-
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்; போலீஸ் அறிவிப்பு
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!