குதிரையேற்றம்: அனுஷ் முதலிடம்

ஹாப்கீஸ்மர்: சர்வதேச குதிரையேற்ற போட்டியில் இந்தியாவின் அனுஷ் முதலிடம் பிடித்தார்.

ஜெர்மனியில், சர்வதேச குதிரையேற்ற போட்டி நடந்தது. இதில் 'டிரஸ்சேஜ்' பிரிவில் இந்தியாவின் அனுஷ் அகர்வாலா 25, பங்கேற்றார். கோல்கட்டாவை சேர்ந்த இவர், கடந்த 2023ல் ஆசிய விளையாட்டு 'டிரஸ்சேஜ்' பிரிவில் தங்கம் (அணி), வெண்கலம் (தனிநபர்) என 2 பதக்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடிய இவர், ஒலிம்பிக் குதிரையேற்ற போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். இப்போட்டியில் 7 வயதான புளோரியானா என்ற குதிரையுடன் களமிறங்கிய அனுஷ், 69.891 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை ஜெர்மனியின் பியா பியோட்ரோவ்ஸ்கி, கேத்ரினா ஹெம்மர் தட்டிச் சென்றனர்.

Advertisement