டூவீலரில் 6 கிலோ கஞ்சா கடத்தல் எருமப்பட்டியை சேர்ந்த 3 பேர் கைது

மோகனுார், நாமக்கல் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், எஸ்.ஐ., செல்லதுரை மற்றும் போலீசார், நேற்று மதியம், 2:00 மணிக்கு, மோகனுார் - பரமத்தி சாலை, தீர்த்தாம்பாளையம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, 'டி.வி.எஸ்., சூப்பிட்டர்' டூவீலரில் வந்த, மூன்று பேரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த டிராவல் பேக்கை சோதனையிட்டனர். அதில், 6.360 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு, 63,600 ரூபாயாகும். விசாரணையில், எருமப்பட்டி சந்திரபோஸ் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பெயின்டர் திருப்பதி, 23, முட்டாஞ்செட்டி நடுத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் விக்னேஷ்வரன், 20, எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த, 18 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்ச மற்றும்
டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement