போலி ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
நாமக்கல், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; வங்கி உதவி மேலாளர். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது தன்வர்த்தினி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால், சில மாதங்களில், அவர் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பது தெரிந்தது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்
பதிந்து, கடந்த ஜூன், 26ல் தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுக்கக்கோரி, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தன்வர்த்தினி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த, 10ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மாஜிஸ்திரேட் செகனாபானு முன்னிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
இந்திய அணியை அச்சுறுத்தும் ஆடுகளம்: 4வது டெஸ்டில் இன்னொரு சோதனை
-
குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
-
செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டி கோரி மனு
-
வருவாய் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
-
திருப்பதி வேங்கடேஸ்வரசுவாமி 26ம் தேதி புதுச்சேரியில் அருள்பாலிப்பு
-
வி ழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்