உலக விளையாட்டு செய்திகள்

அமெரிக்கா ஆதிக்கம்


புர்னோ: செக்குடியரசில் நடந்த பெண்கள் (19 வயது) உலக கோப்பை கூடைப்பந்து பைனலில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மோதின. இதில் அமெரிக்கா 88-76 என வெற்றி பெற்று, 11வது முறையாக சாம்பயன் பட்டத்தை தட்டிச் சென்றது.


ஜிம்பாப்வே கலக்கல்

கம்பாலா: உகாண்டாவில் நடந்த ஆப்ரிக்க கோப்பை ரக்பி தொடருக்கான பைனலில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் ஜிம்பாப்வே அணி 30-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 3வது முறையாக (2012, 2024, 2025) கோப்பை வென்றது.

ஜெர்மனி 'சாம்பியன்'


போட்கோரிகா: மான்டினிக்ரோவில் நடந்த பெண்கள் (19 வயது) ஐரோப்பிய வாலிபால் சாம்பியன்ஷிப் பைனலில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 34-27 என வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நெதர்லாந்து அபாரம்

லில்லி: பிரான்சில் நடந்த பெண்கள் (18 வயது) 'யூரோ' ஹாக்கி பைனலில் நெதர்லாந்து, பெல்ஜியம் அணிகள் மோதின. நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 9வது முறையாக கோப்பை வென்றது.


எக்ஸ்டிராஸ்


* சீன ஓபன் 'சூப்பர் 1000' பாட்மின்டன் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா சென், பிரனாய், சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி, உன்னதி ஹூடா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

* நெதர்லாந்தில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டியில் இந்தியா 'ஏ' அணி 2-8 என நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது. இத்தொடரில் பங்கேற்ற 8 போட்டியில், 3ல் மட்டும் வென்றது இந்தியா.

* பஹ்ரைனில் நடந்த உலக மாஸ்டர்ஸ் ஸ்னுாக்கர் தொடரில் இந்தியாவின் பிரிஜேஷ் தமானி வெள்ளி வென்றார். மற்ற இந்திய வீரர்களான மனன் சந்திரா, விஜய் நிச்சானி வெண்கலம் கைப்பற்றினர்.

* 'டி-20' உலக கோப்பை தகுதிச் சுற்றுக்கு (அக். 8-17, ஓமன்) தயாராக நேபாளம் கிரிக்கெட் அணி வீரர்கள், பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ.,யின் சிறப்பு மையத்தில் (ஆக. 20 - செப். 4) பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

* சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு முதல், சாம்பியன்ஸ் லீக் 'டி-20' தொடரை மீண்டும் நடத்திட ஆலோசிக்கப்பட்டது. கடைசியாக 2015ல் நடந்தது.

Advertisement