குடிநீர் வழங்க கோரி யூனியன் அலுவலகம் முன் முற்றுகை

திருவாடானை: திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு பல மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் மக்கள் சிரமம் அடைந்தனர். இதனால் நேற்று காலை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து பெண்கள் கூறியதாவது:

முறையான குடிநீர் சப்ளை இல்லை. கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் தேவை அதிகமாக தேவைப்படுகிறது. பலமுறை அலுவலர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே அலுவலகத்தை முற்றுகையிட்டோம் என்றனர்.

அதனைத் தொடர்ந்து அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement