சித்தராமையாவே 'மாஸ் லீடர்'

மாநிலத்தில் வரும் இரண்டு ஆண்டு, 10 மாதங்கள் சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார். இதில் எந்த மாறுதலும் இருக்காது. எம்.எல்.ஏ.,க்களான நாங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு சித்தராமையாவை முதல்வராக தேர்வு செய்துள்ளோம். அரசில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால், எம்.எல்.ஏ.,க்களிடம், கட்சி மேலிடம் கருத்து கேட்டறியும்.
தற்போது மாநிலத்தில், முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இதுகுறித்து, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெளிவுப்படுத்தி விட்டார். சித்தராமையாவே 'மாஸ் லீடர்'.
பா.ஜ.,வினருக்கு அரசை விமர்சிப்பது மட்டுமே வேலை. அவர்களின் பேச்சில் தலையும் இருக்காது. வாலும் இருக்காது. மத்திய அரசால், நம் மாநிலத்துக்கு ஏற்படும் அநியாயத்தை பற்றி, பா.ஜ.,வினர் வாயை திறக்கட்டும். இக்கட்சியினருக்கு நல்ல வழிகாட்டி தேவை.
வாக்குறுதி திட்டங்களுக்கு, எங்கள் அரசில் 52,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். பல திட்டங்கள் வழியாக, மக்களின் கணக்குகளுக்கு பணம் செல்கிறது. மாநிலத்தின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.
- பசவராஜ் ராயரெட்டி, முதல்வரின் பொருளாதார ஆலோசகர்