தர்ஷன் ஜாமின் ரத்தாகுமா?

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் ஜாமின் ரத்தாகுமா என்பது இன்று தெரிய வரும்.

சிதர்துர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் , நடிகை பவித்ரா கவுடா உட்பட 7 பேருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, இரு நபர் அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.

அரசு தரப்பு வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இன்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் வாதிடுகின்றனர்.

கடந்த விசாரணையின்போது, ஏழு பேருக்கு ஜாமின் வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தது.

Advertisement