சினிமா

'காந்தாரா 2' படப்பிடிப்பு நிறைவு

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கன்னடத்தில் உருவான 'காந்தாரா' படம் 2022ல் பான் இந்தியா அளவில் வெளியாகி வசூலை அள்ளியது. இதன் இரண்டாம் பாகம் காந்தாரா படத்தின் முன் கள கதையில் உருவாகிறது. வரும் அக்., 2ல் படம் ரிலீஸாகும் நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பான ஒரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, ''கனவுடன் தொடங்கிய படப்பிடிப்பு இது. நம்ம ஊர், மக்கள் மற்றும் நம்ம நம்பிக்கை. இது சாதாரண படம் அல்ல, 250 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு சக்தி, தெய்வத்துக்கு நன்றி. காந்தாரா உலகத்துக்கு வரவேற்கிறேன்' என்கிறார் ரிஷப்.

தள்ளிப் போகிறதா 'எல்.ஐ.கே'

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா நடித்துள்ள படம் 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' (சுருக்கமாக எல்ஐகே). இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. செப்., 18ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட அவரது பட போஸ்டரில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போவதாக சொல்கிறார்கள்.

கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா

நடிகை ஹன்சிகா, 2022ல் சோஹேல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கையில் இப்போது பிரிவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹன்சிகா தன் அம்மாவுடனும், சோஹேல் அவரது பெற்றோர் உடனும் வாழ்ந்து வருவதாக செய்தி பரவி உள்ளது. இதற்கு ஹன்சிகா தரப்பு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. ஹன்சிகா தோழியின் கணவர் தான் இந்த சோஹேல். இவர்கள் பிரிவுக்கு கூட ஹன்சிகா தான் காரணம் என அப்போது செய்தி வந்தது. ஆனால் அதை ஹன்சிகா அப்போது மறுத்தார்.

விஜயின் அரசியல் தைரியம் பார்த்திபன் சுவாரஸ்யம்

ஜனநாயகன் படத்திற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் இறங்குகிறார். பார்த்திபன் வெளியிட்ட பதிவில், ''கல்யாணசுந்தரம் படம் போட்டோ செஷனோடு முடிந்தது. கைவிடப்பட்ட படம். பூஜை அன்று 10 ஜோடிகளுக்கு என் சொந்த செலவில் தாலி முதல் மெட்டி வரை, சீர் செய்து திருமணம் செய்து வைத்தேன். பின்னொரு காலத்தில் என் தலைமையில் 16 ஜோடிகளுக்கு விஜய் திருமணம் செய்து வைத்தார். அன்று இதன் மூலம் புண்ணியம் சேர்க்கும் விஜய் மணமக்களுக்கு நன்றி சொல்லணும் என்றேன். இப்படிப்பட்ட நல்ல காரியங்கள் தான் அவருக்கு கட்சி துவக்கும் தைரியத்தை தந்தது'' என்கிறார்.

'பெத்தி': தீவிர ஒர்க் அவுட்டில் ராம் சரண்

புஜ்ஜி பாபு சனா இயக்கும் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடிக்கிறார். ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கிராமத்து ரோலில் ராம் சரண் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடியை அவர் வளர்த்து வருவதோடு கடுமையான உடற்பயிற்சி செய்து உடலையும் கட்டுமஸ்தாக மாற்றுகிறார். அந்த போட்டோவை பகிர்ந்து,''மாற்றம் தொடங்குகிறது. தூய மன உறுதி, உண்மையான மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் 'பேமஸ்' ; சினிமாவில் 'ஆவரேஜ்' : பவன் கல்யாண்

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்து ஜூலை 24ல் வெளியாகும் பான் இந்தியா படம் 'ஹரிஹர வீரமல்லு'. இப்பட நிகழ்வில் பேசிய பவன், “அரசியல் ரீதியாக இந்தியா முழுவதும் நான் பிரபலமாக இருக்கலாம். ஆனால் நடிகராக எனது பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் மற்ற நடிகர்களை விடவும் குறைவுதான். அதனால் இதற்கு ஆதரவு தர வேண்டுகிறேன். திறமை உள்ள யாரும் வளரலாம். அதனால் சினிமா மீது எனக்கு மரியாதை உண்டு'' என்றார்.

மீண்டும் படம் தயாரித்து நடிக்கும் சமந்தா

தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை எடுத்ததன் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார் சமந்தா. இதில் புதுமுகங்கள் நடித்தனர். சமந்தா சிறப்பு வேடத்தில் நடித்தார். ஆனால், அந்தப்படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை தயாரித்து, அதில் நாயகியாகவும் நடிக்க போகிறார் சமந்தா. இதை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் 2019ல் சமந்தாவின் 'ஓ பேபி' படத்தை எடுத்தவர்.

Advertisement