ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்

மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாளை (ஜூலை 23) இரவு 11:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06711), மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் ஜூலை 24 அதிகாலை 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06712), காலை 6:00 மணிக்கு மதுரை வந்து சேரும். இரு ரயில்களும் மதுரை கிழக்கு, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மதுரை - ராமேஸ்வரம் இடையே மேலும் சில ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன.

Advertisement