வி ழுப்புரத்தில் பா.ம.க., போராட்டம்
வி ழுப்புரத்தில் பா.ம.க., போராட்டத்திற்கு அனுமதித்த போலீசார், பிரச்னை ஏற்பட்டதால், தும்பை விட்டு வாலை பிடிக்கும் விதமாக, வழக்குப்பதிந்து வருகின்றனர்.
விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து, நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் போராட்டம் நடந்தது.
போலீசார் திட்டமிடாமல், பஸ் நிலையம் அருகே நகரின் மையத்தில் போராட்டத்திற்கு அனுமதியளித்ததால், பெரும் கூட்டம் திரண்டு ஸ்தம்பிக்க செய்தது. பகல் 11:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியம் 1:30 மணிக்கு முடிந்தது.
போராட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கார், வேன், பைக்குகளில் அணி வகுத்ததால், விழுப்புரத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மாற்று சாலையில் வாகனங்களை போலீசார் திருப்பிவிட்டனர். இருந்தபோதும், விழுப்புரம் பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்கள், பொதுமக்கள், வந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் தவிப்புக்குள்ளாகினர்.
போராட்டத்திற்கு வந்த சிலர், தி.மு.க., பேனரை கிழித்தனர். இந்நிலையில், தி.மு.க., விற்கு எதிராக எழுந்த கடும் விமர்சனம் காரணமாக, பா.ம.க., வினர் மீது, வழக்குகள் பாய்ந்து வருகிறது. முதல் நாளில், விழுப்புரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டதாக பாமகவினர் 50 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
தி.மு.க., தரப்பில் அடுத்தடுத்த புகார்கள் காரணமாக, பா.ம.க., மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மீதும், தி.மு.க., பேனர்களை கிழித்தாக வழக்கு பதியப்பட்டுள்ளது. நேற்று வரை 75 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், ஆளும் கட்சியின் நெருக்கடியால், பா.ம.க., வினர் மீது மேலும் வழக்குகள் பதியப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியை கண்டித்து, விழுப்புரம் நகரில் ஒ ரு பெரிய கட்சி போராட் டம் நடத்தினால் எவ்வளவு கூ ட்டம் கூடும், டிராபிக் ஜாம், பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்த போலீசார், முன் கூட்டியே நடவடிக்கை எடுக்காமல், பிரச்னைகள், நெருக்கடிகள் ஏற்ப ட்ட பிறகு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும்
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு
-
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை
-
ரூ.7 கோடி முதலீடு, ரூ.90 கோடி லாபம்; 2025ல் நாட்டிலேயே அதிக வசூல் படைத்த டூரிஸ்ட் பேமிலி
-
நாளைய மின்தடை
-
முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
-
சிறப்பு வழிபாடு