அப்பாச்சி., வந்தாச்சி

4


புதுடில்லி: அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று 128 இலக்குகளை தாக்கும்.



அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது.



@block_Y@ 2015ம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவுடனான ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விமானப்படையில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும், ராணுவத்தில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.block_Y


உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. கூடுதலாக மேலும் 6 ஹெலிகாப்டர்களை வாங்க, கடந்த 2020ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.5,171 கோடியில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த நிலையில், முதற்கட்டமாக, 3 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இன்று ஜூலை 22ம் தேதி வந்து சேர்ந்தது.

அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த வருகிறது. தற்போது இந்தியாவும் தனது வலிமையை பெருக்கி உள்ளது.

Advertisement