சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்

சாங்சூ: சீன ஓபன் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு பிரனாய் முன்னேறினார்.
சீனாவில் 'விக்டர் ஓபன்' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 35 வது இடத்திலுள்ள இந்தியாவின் பிரனாய், 18 வது இடத்திலுள்ள ஜப்பானின் கோகி வடனபேவை எதிர் கொண்டார்.
முதல் செட்டை 8-21 என எளிதாக இழந்தார் பிரனாய். சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டை 21-16 என கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் பிரனாய் 15-20 என பின் தங்கினார்.
பின் தொடர்ந்து 6 புள்ளி எடுக்க 21-20 என முந்தினார். அடுத்து 23-21 என செட்டை வசப்படுத்தினார். முடிவில் 8-21, 21-16, 23-21 என போராடி வென்றார்.
லக்சயா ஏமாற்றம்
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் இளம் வீரர் லக்சயா சென் ('நம்பர்-18'), சீனாவின் ஷி பெங்கை ('நம்பர்-5') சந்தித்தார். இதில் லக்சயா சென் 21-14, 22-24, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் அனுபமா, 23-21, 11-21, 10-21 என்ற செட் கணக்கில் தைவானின் ஹிசியாங்கிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
மீனவர் பலி
-
ஜூலை 26ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
-
மாநில குத்துச்சண்டை போட்டி; வென்ற மாணவிக்கு பாராட்டு
-
பணிவான சேவகனாக பணியாற்றுவேன் ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி
-
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மீனவர் கூட்டமைப்பு கண்டனம்
-
பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி