மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைக்க வேண்டும்: முதல்வருக்கு பா.ஜ., வலியுறுத்தல்

சென்னை; விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக் கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது அரசு அலட்சியப்படுத்துவது கண்டனத்திற்குரியது.
தேர்தல் சமயத்தில் "மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தி.மு.க., தேர்தல் எண் 35-ல் உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாது விலை வீழ்ச்சியால் விவசாயிகளை அவதியுறவிட்டதோடு, தற்போது கூட்டுறவு ஆலையும் அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடல் அரசின் உழவர் நலனா?
விவசாயிகளுக்கு முறையான பாசன வசதி ஏற்படுத்தித் தருவதில்லை, விளைவித்த பயிருக்கு முறையான விலை கிடைக்க வழி வகுப்பதில்லை, உழவர் நலன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் இல்லை, இந்த லட்சணத்தில் "பச்சை துண்டு போடும் போலி விவசாயி நான் அல்ல" என்று ஆவேசமாக முழங்குவதால் மட்டும் என்ன பயன் என்பதை முதல்வர் உணர வேண்டும்.
விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும்
-
இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?
-
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: பவன் கல்யாண் விருப்பம்
-
கன்வார் யாத்திரையில் 150 கி.மீ., துார பயணம்: கணவரை தோளில் சுமந்த நம்பிக்கை பெண்
-
சீன ஓபன் பாட்மின்டன்: இரண்டாவது சுற்றில் பிரனாய்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா: நீதிபதி பதவி நீக்க தீர்மானம் காரணமா?
-
தி.மு.க., கூட்டணி உடைவதற்கான அறிகுறி: அண்ணாமலை