உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி

காத்மாண்டு: நேபாளத்தில் கல்வி, சுகாதாரம் உள் ளிட்ட துறைகளை மேம்படுத்தும் வகையில், மத் திய அரசு சார்பில் 24.38 கோடி ரூபாய் நிதியுத வி அளித்துள்ளது. இதற்கான, இரு நாடுகளுக்கு இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

நம் அண்டை நாடான நேபாளத்தின் மாதேஷ் மற்றும் சுதுர்பாச்சிம் மாகாணங்களில் ஏராளமான பள்ளி கட்டடங்களை கட்டமைக்கவும், கந்தாகி மாகாணத்தில் மருத்துவமனையை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக, மத்திய அரசு சார்பில் நிதியுதவியாக 24.38 கோடி ரூபாயை, அங்குள்ள நம் நாட்டு துாதரக அதிகாரிகள், நேபாள அரசிடம் நேற்று அளித்தனர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே நேற்று கையொப்பமானது. இதன் வாயிலாக இருதரப்புக்கு இடையே நல்லுறவு வலுப்படும் எனவும், அந்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்படும் எனவும் நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement